தூரிகைத் துளிகள்

பெண்ணே நீ பாரதி
ஏனென்றால் எனக்காக புரட்சி செய்தவள் நீ
அன்பே நீ அன்னை திரேசா
ஏனென்றால் அனாதையான என்னை ஆளாக்கியவள் நீ
பூவே நீ ஒஸாமா
ஏனென்றால் என் இதய பெண்டகனை தாக்கியவள் நீ
உயிரே நீ காந்திஜி
ஏனென்றால் எனக்காக சத்திய சோதனை அனுபவித்தவள் நீ
அன்பே நீ அமுதசுரபி
ஏனென்றால் என் மீது பாசத்தை இறைப்பவள் நீ
அன்பே மொத்தத்தில்
                             என் உலகம் நீ
                                   என் வாழ்க்கை நீ
                                 என் வரலாறு நீ




அம்மாவிற்காக சில கணங்கள்


 உன் உடல் மரிக்க உயிர் துடிக்க
உணர்வுகள் பிழிந்து செதுக்கினாய்  என்னை
ஒரு ஜென்மம் நானெடுக்க 
மறு ஜென்மம் நீயெடுத்தாய் 
பசி மறந்தாய் தூக்கம் தொலைத்தாய்
சந்தோசம் ஒன்று மட்டும் உணர்ந்தாய்- என்னில் 
உலகம் இருப்பதை அறிந்தாய்- என்னில் 
பாலோடு பாசம் தந்தாய்
உணவோடு உணர்வோடு  படைத்தாய் 
உன் உதிரத்தில் இருந்தே 
தமிழன் என்ற பெயரையும் கொடுத்தாய் 
    அம்மா 
                சுமந்தாய்            -   கருவறைக்குள் தூங்கினேன்
                ஈன்றாய்             -    பிறவி எடுத்தேன் 
                பாலூட்டினாய்  -    பசி மறந்தேன்
                மடி தந்தாய்      -    மகிழ்வுற்றேன்
                மரணித்தாய்     -    நானும் மடிந்து போனேன்
              
அறிவியலிடம் கேட்கிறேன்
இறந்த காலத்திற்கு செல்ல
எனக்கொரு இயந்திரம் செய்து தா
இன்றிலிருந்து
இருபது வருடங்கள் பின் சென்று
என் அம்மாவின் கருவறைக்குள் புகுந்துகொள்ள
                                                மறுபடி பிறக்க
                                                மீண்டும் தாய் முகம்  காண
                                                மறுபடி தாய்ப் பாலுண்ண
                                                மீண்டும் தாய் மடி சாய
                    இம்மண்ணில் இல்லாத என்னுயிர் அம்மாவோடு
                    மறுபடி ஒரு தடவை உறவாடி மடிகிறேனே......!

நேசிக்கத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த நேசம் வலைப்பூ

நேசத்தோடுசங்கமித்திருக்கும் நேச நெஞ்சங்களுக்கு என் வணக்கம்.